Aran Sei

ஒரே கிராமத்தை சேர்ந்த 17 பேர் மரணம் – உத்தர பிரதேசத்தில் ஒரு மாதத்தில் நிகழ்ந்த சோகம்

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்திலுள்ள சுல்தான்பூர் கேஹரா கிராமத்தில், கடந்த ஒரே மாதத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இறந்த 18 பேரில் 17 பேர் காய்ச்சல், இருமல், தலைவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உள்ளிட்ட நோய் அறிகுறிகளோடு இறந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி – வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியை சார்ந்த தினேஷ் சிங் கூறும்போது, இறந்த 18 பேரில் 15 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை அல்லது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படவில்லை என்றும், இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

மேலும், 18 பேரில் ஒரு பெண் மட்டும் இருதயக் கோளாறு காரணமாக இறந்ததாகவும் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றும் தினேஷ் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு என நோட்டீஸ் வெளியிட்ட மருத்துவமனை – வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

இதனை தொடர்ந்து , கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவுள்ளதாக தினேஷ் சிங் கூறியதா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்