தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான தேர்தல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று, மே 2 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் கேரள சட்டமன்றத்திற்கான தேர்தலில், பெருன்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற ஆளும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
கேரளா வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் இடது சாரி ஜனநாயக முன்னணியின் முதலமைச்சராக தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று பதவியேற்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 20 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இதில் கோவில்களை நிர்வகிக்கும் தேவசம்போர்டு அமைச்சராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்டியலின பெண்கள் தங்கள் மார்பளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் என கூறிய திருவிதாங்கூர் சமஸ்தானம் அமைந்திருக்கும் கேரளா சட்டமன்றத்தில், தேவசம்போர்ட் அமைச்சராக ஒரு பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.