Aran Sei

குதுப் மினார்: 800 ஆண்டுகளாக வழிபாடுகளின்றி தெய்வம் இருந்து விட்டதென்றால், இனிமேலும் அப்படியே இருக்கட்டும் – டெல்லி நீதிமன்றம் கருத்து

குதுப் மினார் வளாகத்தில் இருந்ததாக கூறப்படும் ஒரு இந்து கோயிலை மீட்டெடுக்க வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக டெல்லி சாக்கெட் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்று வருகிறது.

மனுதாரர் தனது மனுவில், “1187 ஆம் ஆண்டில் குதுப் மினார் வளாகத்தில் உள்ள மசூதியை கட்டுவதற்காக சுமார் 27 சமண மற்றும் இந்து கோயில்கள் அகற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 க்கு எதிரானது என்று கூறி உரிமையியல் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.

குதுப்மினார் கோபுரத்தை இஸ்லாமிய மன்னர் கட்டவில்லை: விக்ரமாதித்யா மன்னர்தான் கட்டினார் என தொல்லியல் துறையின் முன்னாள் அதிகாரி கருத்து

கோயில் இருந்த இடம் இப்போது அழிக்கப்பட்டாலும், அதன் தெய்வீகம் இழக்கவில்லை. தெய்வம் இருக்கிறது என்றால் வழிபடுவதற்காக உரிமையும் இருக்கிறது என்று டெல்லி சாக்கெட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்து கோயில் இஸ்லாமியர்களால் இடிக்கப்பட்டது என்று ஒப்புக்கொண்டாலும் கூட, அது மசூதியாகப் பயன்படுத்தப்படவில்லை. ஆகவே இதனை எந்த அடிப்படையில் மீட்டெடுக்க முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று கூற முடியுமா?” என்று டெல்லி சாக்கெட் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குதுப் மினார் வளாகத்தில் இடிக்கப்பட்ட இந்து கோவில்களை மீண்டும் கட்ட வேண்டும் – விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை

“இந்த நினைவுச் சின்னம் மீண்டும் கோயிலாக மாற்றப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படியென்றால் 800 ஆண்டுகளுக்கு முன்பு அது ஒரு இந்து கோயிலாக இருந்தது என்று கருதுவதால், அதில் மனுதாரர்களுக்கு ஒரு சட்டப்பூர்வ உரிமை உண்டு என்று நீங்கள் எப்படிக் கூறுவீர்கள்? 800 ஆண்டுகளாக வழிபாடுகளின்றி தெய்வம் இருந்து விட்டது. இனிமேலும் அப்படியே இருக்கட்டுமே” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு ஜூன் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குதுப் மினார் வளாகத்தின் கட்டுமானத்தில் இந்து மற்றும் சமண தெய்வங்களின் கட்டிடக்கலை படங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது உண்மை என்றாலும், பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தலங்கள் சட்டம், 1958-ன் படி குதுப் மினார் பாதுகாக்கப்படுவதால், இந்த நினைவுச்சின்னத்தில் வழிபாடு செய்வதற்கான அனுமதியை அளிக்க முடியாது என்று இந்தியத் தொல்லியல் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Source : the wire

Savukku Shankar Arrest ஆக வாய்ப்பே கிடையாது Piyush Manush Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்