Aran Sei

எலிசபெத் ராணியின் கிறிஸ்துமஸ் உரை – தீபாவளி, ரம்ஸான் பற்றிய குறிப்புகள்

Image Credits: TIME

பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் ராணி தனது பாரம்பரிய கிறிஸ்துமஸ் தின உரையின் ஒரு பகுதியாகப் பொதுமுடக்கத்தின் பொது கொண்டாடப்பட்ட பண்டிகைகள் குறித்தும் பேசியுள்ளார். இந்த ஆண்டு, ‘பன்முகத்தன்மை மற்றும் நம்பிக்கை’ என்ற தலைப்பின் கீழ் அவர் உரையாற்றியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 25 அன்று இந்த உரை ஒளிபரப்பாகும். ஒளிபரப்பிற்கு முன்னரே உரை பதிவு செய்யப்படும்.

கிறிஸ்துமஸ் அதன் உண்மையான சாரத்தை இழந்துவிட்டது – பாதிரியார் ஜே.பெலிக்ஸ் ராஜ்

94 வயதான எலிசபெத் ராணி பல தசாப்தங்களில் முதல் முறையாக ஒரு பெரிய அரச குடும்பக் கூட்டமின்றி கிறிஸ்துமஸை கழித்துளார். அவர், அனைவரும் சகிப்பு தன்மையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். பல நம்பிக்கைகள் மற்றும் பின்னணியை கொண்ட மக்கள், தேசத்தின் நலனுக்காகச் செய்த பங்களிப்பைக் குறித்து அவர் மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

“கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, இயேசுதான் ‘உலகின் ஒளி’, ஆனால் இன்று அவருடைய பிறப்பை நாம் வழக்கமான முறையில் கொண்டாட முடியாது. பஸ்ஸோவர், ஈஸ்டர், ஈத் மற்றும் வைசாகி போன்ற பண்டிகைகளுக்கு அவர்கள் விரும்புவதைப் போல அனைத்து மத மக்களும் ஒன்றுகூட முடியவில்லை. ஆனால், இதனை கடந்து வாழ்க்கை செல்ல வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

“இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்கள் தீபாவளியைக் கொண்டாடியதால், கடந்த மாதம், பட்டாசுகள் விண்ட்சரைச் சுற்றி வானத்தை ஒளிரச் செய்தன. சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டபோதும், அது நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான தருணங்களை வழங்குகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் காரணமாக மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்த போதும், குறிப்பிடத் தக்க வகையில், இது நம்மை நெருக்கவும் வைத்துள்ளது. தேவைப்படுபவர்களுக்கு உதவும் தன்னார்வலர்களின் கதைகளை கேட்டு நானும் என் குடும்பத்தினரும் உத்வேகம் அடைந்துளோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த ஆண்டு, மகிழ்ச்சியாகக் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுவது சரியாகப் படவில்லை. எனவே அதற்குப் பதிலாக 2021-ம் ஆண்டு சிறப்பானதாக அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்