கியானவாபி மசூதியை ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்ததையடுத்து அதன் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ளது.
வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதி வளாகத்திற்குள் மே 14, 15, 16 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்றது. அதன் அறிக்கையை மே 17 தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நிதிமன்றத்தில் கமிஷனர் மற்றும் வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
கியானவாபி மசூதி வளாகத்திற்குள் வீடியோ ஆய்வு நடத்துவதற்காக இங்குள்ள நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷன் இன்று தனது அறிக்கையைச் சமர்ப்பித்ததாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
மே 14, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு வழக்கறிஞரும் கமிஷனருமான விஷால் சிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணியின் அறிக்கையை மாவட்ட சிவில் நீதிமன்றத்தின் நீதிபதி ரவிக்குமார் திவாகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று இந்த வழக்கில் இந்துக்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதன் மோகன் யாதவ் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் வழக்கறிஞராகவும் கமிஷனராக இருந்த அஜய் மிஸ்ராவை நீதிமன்றம் நீக்கியது. ஆனால், மே 6, 7 ஆகிய தேதிகளில் அவர் நடத்திய கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை நேற்று (18.5.22) தாக்கல் செய்ததாக வழக்கறிஞர் மதன் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்
முன்னதாக, அஜய் மிஸ்ராவை கமிஷனர் பொறுப்பிலிருந்து நீக்கிய நீதிமன்றம், பின்னர் விஷால் சிங்கை சிறப்பு வழக்கறிஞர் மற்றும் கமிஷனராகவும் அஜய் பிரதாப் சிங்கை உதவி வழக்கறிஞர் கமிஷனராகவும் நியமித்தது.
மறுசீரமைக்கப்பட்ட ஆணையம் மே 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கணக்கெடுப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது
Source: Thenewindianexpress
Subramanian Swamy யை கேள்வி கேக்கும் தைரியம் Congress க்கு இருக்கா? Haseef
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.