Aran Sei

‘ஜனவரி – மார்ச் காலாண்டில் ரிலையன்ஸின் லாபம் 108% உயர்வு’: கார்ப்பொரேட்டுகளுக்கு பேரிடரும் பெருங்கொண்டாட்டம்தான் – கே.கனகராஜ் (சி.பி.எம்)

னவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் இருமடங்காக உயர்ந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மாதம் மார்ச் வரை ₹6,348 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாகவும், அதுவே இந்த ஆண்டு இரட்டிப்பாக ₹13,227 கோடி ரூபாய் ஈட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

நரேந்திர மோடி மைதானத்தில் ரிலையன்ஸ், அதானி முனைகள் – ராகுல் காந்தியின் ’நாம் இருவர், நமக்கு இருவர்’ கிண்டல்

மேலும், கடந்த ஆண்டு மார்ச் வரை அந்நிறுவனத்தின் வருவாய் 13.62 விழுக்காடு அதிகரித்து ₹ 15,1461 கோடியாக இருந்ததாகவும், அதுவே இந்த ஆண்டு மார்ச் மாதம்வரை 108 விழுக்காடு அதிகரித்து ₹172,095 கோடி ரூபாய் வருவாய் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே போன்று மொத்த லாபமானது ₹53,739 கோடி அதாவது 34.8% உயர்ந்திருப்பதாகவும், கடந்த வருடம் ₹ 39,880 கோடியாக இருந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ், ஃபியூச்சர் குழுமம் இடையிலான ஒப்பந்தம் நிறுத்திவைப்பு – அமேசான் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் ₹ 12,537 கோடி மொத்த லாபம் ஈட்டியிருப்பதாகவும், 426.2 மில்லியன் அளவுக்கு அதன் பயனாளர்கள் அதிகரித்து இருப்பதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”ஜனவரி-மார்ச் காலாண்டில் ரிலையன்ஸின் லாபம் ஒருமடங்கிற்கும் அதிகமாக(108%) உயர்ந்திருக்கிறது.பொருளாதாரம் என்பது முதலாளித்துவத்தில் எப்போதுமே ஏழைகளுக்கு எதிர்மறை வளர்ச்சிதான். கார்ப்பொரேட்டுகளுக்கு பேரிடரோ பெரும்கொண்டாட்டமோ பெருவளர்ச்சிதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

source-the hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்