Aran Sei

பஞ்சாப்: ஆம் ஆத்மி அமைச்சர்கள் 11 பேரில் 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள்; 9 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்

ண்மையில் பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதன்படி பொறுப்பேற்று கொண்ட ஆம் ஆத்மி அமைச்சர்களில் 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேர்தல் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் தேர்தல் – வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் 74% பேர் கோடீஸ்வரர்கள்; பாதி பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன

4 அமைச்சர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன
அந்த 11 அமைச்சர்களில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் அடக்கம்.

மேலும் அந்த 11 அமைச்சர்களில் 9 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் அவர்களின் சராசரி சொத்து மதிப்பு 2.87 கோடி ரூபாய் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேர்தல் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

இந்த 9 அமைச்சர்களில் பிரம் ஷங்கர் என்ற அமைச்சர் அதிகபட்சமாக 8.56 கோடி சொத்து சேர்த்து முதல் இடத்தில் உள்ளார்.

பாஜகவின் ஜெய் ஸ்ரீராம் முழக்கமும் ஆம் ஆத்மியின் ராம ராஜ்யமும் – நந்தா

ஆம் ஆத்மி கட்சி சார்பாக வெற்றி பெற்ற 92 வேட்பாளர்களில், 69% பேர் கோடீஸ்வரர்கள் மற்றும் 57% பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் வெற்றி பெற்ற 63 ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 1 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளனர் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேர்தல் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்