Aran Sei

வேளாண் சட்டத்தை நீக்கக் கோரி பஞ்சாப்பின் புதிய அமைச்சரவை தீர்மானம் – ஒன்றிய அரசு செவி சாய்க்குமா?

ன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடும் விவசாயிகளுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்து  பஞ்சாப் மாநிலத்தின் புதிய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் 300 நாட்களை எட்டியதை அடுத்து, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா செப்டம்பர் 27 ஆம் தேதி நாடு முழுவதும் பொது வேலை முடக்கத்தை அறிவித்தது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தவிர்த்து, பெரும்பாலான எதிர்கட்சிகளும் மாநில கட்சிகளும் பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும், தொழிற்சங்கத்தினரும் பலதரப்பட்ட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

போராடும் விவசாயிகளின் பாரத் பந்த்: ஆதரவு தெரிவித்து தென்னிந்தியா முழுவதும் மாநில கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நேற்றைய (செப்டம்பர் 27) பாரத் பந்த்தை கருத்தில் கொண்டு பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அக்கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அமைச்சரவை அறிக்கையில், “அமைச்சரவை விவசாயிகளுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக தீர்மானம் நிறைவேற்றியது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு மட்டும் எதிரானவை அல்ல, நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கே எதிரானவை என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி, “நான் விவசாயிகளுடன் நிற்கிறேன். விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை ரத்து செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துவேன். ஓர் ஆண்டிற்கும் மேலாக நம்முடைய விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். அவர்களின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்