Aran Sei

போலி மதுபான சாவுகள் – தயாரிப்பவர்களுக்கு மரணதண்டனை – பஞ்சாப் கலால் சட்டத்தில் திருத்தம்

ள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்புடையோர் மீது மரண தண்டனையை வழங்கும் வகையில் அதன் கலால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்திருக்கிறது என்று தி வயர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முடிவானது சென்ற வருடம் ஜூலையில் அம்ரித்சர் , குர்தாஸ்பூர், தரன் தரன் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த கொடூர நிகழ்வைப் போல இன்னொரு நிகழ்வு நடைபெறக் கூடாது என்ற வகையில், கடந்த திங்கள் அன்று  நடந்த பஞ்சாப் அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பின் வாக்காளர்களைப் போலவே அனைவரும் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் – ப.சிதம்பரம் நம்பிக்கை

இந்த மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பஞ்சாப் சட்டப் பேரவையில் கொண்டுவர இருப்பதாகவும் , இதன் முக்கிய நோக்கம் குற்றம் புரிபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதும், கடுமையான தண்டனை வழங்குவதுமே என்று அரசு அறிவித்திருக்கிறது.

இதன்படி, பஞ்சாப் கலால் சட்டம், 1914 ல் 61-A என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட இருக்கிறது.  இந்த புதிய பிரிவில் கள்ளச்சாராயம் அருந்தி மரணம் ஏற்பட்டால் அதனோடு தொடர்புடைய குற்றவாளிக்கு மரணதண்டனை (அ) ஆயுள்தண்டனையும் 20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

உடல் ஊனம் (அ) கடுமையான காயங்கள் ஏற்பட்டால் குறைந்தபட்சம் ஆறுவருட கடுங்காவல் தண்டனை வழங்கப்படும், அது ஆயுள் தண்டனையாகாவும் நீட்டிக்கப்படவும் கூடும், அதனோடு 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

குறைந்தபட்ச காயம் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஒரு வருட தண்டனையும், 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.

அதே போல கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சமும், காயமுற்றவரின் குடும்பத்திற்கு 3 லட்சமும் கள்ளச்சாராயத்தை தயாரித்தவரும் விற்றவரும் வழங்க வேண்டும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிப்பட்டுள்ளது.

மேலும் பிரிவு 63-ன் படி சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுபவருக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் அதிகபட்சம் மூன்று ஆண்டு வரை சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். சட்ட விரோதமாக மதுவை தயாரித்தலோ, கடத்தினாலோ, விற்றாலோ தண்டனை மூன்று வருடத்திலிருந்து ஆறு வருடமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்றும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்