Aran Sei

“ஊரடங்கு, போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்த விட மாட்டோம்” – விவசாயிகள் போராட்டக் குழு

ஞ்சாபில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கிற்கு, விவசாயிகள் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

வர்த்தக மற்றும் பிற அத்தியாவசியமற்ற கடைக்காரர்களை, கடைகளைத் திறக்கச் சொல்லி, நூற்றுக்கணக்கானவர்கள் ‘ஊரடங்கை’ எதிர்த்து பேரணியாக சென்றதாகவும், இருப்பினும் பெரும்பாலான வர்த்தக அமைப்பினர் இவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி வயர் இணையதளத்திடம் பேசிய விவசாய சங்கத் தலைவர்கள், “கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டிருக்கும் நிலைமையைச் சமாளிக்க ’ஊரடங்கு’ உதவும் என நாங்கள் நம்பவில்லை” என ஒருமித்தகுரலில் தெரிவித்துள்ளனர்.

‘ஆக்சிஜன் சிலிண்டர், மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்’ – பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

”போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல், வெறும் ‘ஊரடங்கு’ விதித்து மக்களுக்கு உதவுவது போன்று அரசாங்கம் (பிரதமர் மோடி) காட்டிக்கொள்கிறது. இந்தியாவில் முறையான பாதுகாப்பு வசதிகள் இருப்பதை மோடி முதலில் உறுதி செய்திருக்க வேண்டும்” என கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் (கே.எம்.எஸ்.சி) தலைவர் சர்வான் சிங் பந்தர் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

”டெல்லியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி அரசால் ஏற்பட்டது, அதற்கு விவசாயிகள் போராட்டத்தைக் காரணம் காட்ட முடியாது” என அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘உச்சநீதிமன்ற ஆணையின்படி, பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள்’ – முதல்வருக்கு ரவிகுமார் வேண்டுகோள்

தொழிலாளர் சங்க செயற்பாட்டாளரும் பஞ்சாப் கேத் மஸ்தூர் தொழிற்சங்கங்களின் தலைவருமான லச்மன் சிங் செவேவாலா, ”பஞ்சாப் மாநிலத்தின் கிராமப்புறங்களில் மருத்துவ வசதிகள் தோல்வியடைந்துள்ளன. ஊரடங்கை தவிர எதுவும் மேம்படவில்லை” என கூறியுள்ளதாக தி வயர் தெரிவித்துள்ளது.

தி வயர் இணையதளத்திடம் பேசிய லூதியானாவைச் சேர்ந்த வர்த்தகர் அஜித் லக்ரா, ”லூதியானாவில் இருக்கும் வர்த்தகர்கள் யாரும், விவசாயிகளின் கோரிக்கைக்கு சாதகமாக பதிலளிக்கவில்லை. அவர்கள் தெரிவித்திருப்பதை போல கொரோனா நிலைமை தீவிரமாக உள்ளது, இதனால் வர்த்தகர்களுக்குப் பாதிப்பு என்றாலும், அரசின் விதிகளுக்குக் கட்டுப்படுகிறோம்.” என்று கூறியுள்ளார்.

அனைத்து மாநிலங்களுக்கும் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க 12 பேர் கொண்ட நிபுணர் குழு – உச்சநீதிமன்றம் நியமித்தது

மேலும், “சந்தைகளிலிருந்து மூலப்பொருட்களை எங்களால் பெற முடியவில்லை. நாங்கள் தொழிலாளர் பற்றாக்குறையையும் எதிர்கொண்டிருக்கிறோம், ஆனால் அரசாங்கம் விதித்த முடக்கத்திற்கு நாங்கள் இணங்குகிறோம். விவசாயிகளின் இந்த முடிவை லூதியானாவில் யாரும் ஆதரிக்கவில்லை” என்று வர்த்தகர் அஜித் லக்ரா கூறியுள்ளார்.

”ஊரடங்கு கட்டுப்பாடுகள் விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என, கே.எம்.எஸ்.சி தலைவர் பந்தர் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்