Aran Sei

லோஹ்ரி பண்டிகையில் எரிக்கப்பட்ட விவசாய சட்ட நகல்கள் – ஒன்றுகூடிய பஞ்சாப்பின் 1600 கிரமங்கள்

விவசாய சட்டங்கள் மீதான தங்களின் எதிர்ப்பை காட்டுவதற்காக, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் லோஹ்ரி பண்டிகைக்கு கொளுத்தப்பட்ட நெருப்பில் அந்தச் சட்ட நகல்களை எரித்துள்ளனர்.

கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் கீழ், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சட்ட நகல்களை எரித்துள்ளனர் என்றும் பாரதிய விவசாயிகள் சங்க (ஏக்தா-உக்ரஹான்) விவசாயிகள், மாநிலத்தின் 16 மாவட்டங்களில், 1600 கிராமங்களில் இந்த சட்ட நகல் எரிப்பு போராட்டத்தை செய்துள்ளனர் என்றும் பாரதிய விவசாயிகள் சங்க முன்னணியின் பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

போகி நெருப்பில் கொளுத்தப்பட்ட விவசாய சட்ட நகல்கள் – கைது செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச்செயலாளர் சர்வன் சிங் பாந்தர் கூறுகையில், “பஞ்சாப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் அடங்கிய குழு, தங்கள் டிராக்டர் மற்றும் வண்டிகளில், குடியரசு தின டிராக்டர் பேரணியில் பங்கேற்க டெல்லியை நோக்கி பயணத்தைத் தொடங்கியுள்ளது. டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் போன்றவற்றில் விவசாயிகள் அணிவகுத்து செல்கின்றனர்.” என்று தெரித்துள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

நன்றி : Deccan Herald

சீக்கிய அமைப்பான தால் கல்சா உறுப்பினர்கள், அமிர்தசரஸில் விவசாய சட்டங்களின் நகல்களை எரித்ததுடன், சர்வாதிகாரமாகவும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகவும் பாஜக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் – சட்ட நகல்கள் எரிப்பு, “டெல்லி சலோ” பேரணி, பெண்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

“உச்ச நீதிமன்றத்தால் விவசாய சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது, இந்தப் பிரச்சனைக்கு இது ஒரு தீர்வாக அமையாது. விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்கும் விஷயத்தில் மத்திய அரசு மோசமாக செயல்படுகிறது. பாஜக அரசின் சிறுபான்மை எதிர்ப்பு அரசியலுக்கும் பாசிச செயல்பாடுகளுக்கும் எதிராக பஞ்சாப் உள்ளது.” என்று தால் கல்சா அமைப்பின் தலைவர் கன்வர் பால் சிங் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் விவசாய சட்டங்களின் நகல்களை எரித்துள்ளது. அதன் மாநிலத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான பகவந்த் மான் தி இந்துவிடம் கூறுகையில், எங்கள் கட்சி தொண்டர்கள் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய சட்ட நகல்கள் எரித்ததன் வழியாக, போராடி வரும் விவசாயிகளின் தைரியத்திற்கு வணக்கம் தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்