பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்மைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.
நேற்று(ஜனவரி 8), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள சரண்ஜித் சிங் சன்னி, “பிரதமரின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இதைச் சொல்லிச் சொல்லி நான் சோர்வடைந்து விட்டேன். என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது பிரதமர் ஜி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“என்ன பேசுகிறீர்கள்? எங்கே உங்களுக்கு மிரட்டல் வந்தது? பிரதமரிடமிருந்து ஒரு கி.மீ தூரத்திற்கு எந்த போராட்டக்காரர்களும் இல்லை. பிரதமரின் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அவருடைய 6,000 பாதுகாப்புப் பணியாளர்கள் வருகிறார்கள். உளவுத்துறை இருக்கிறது. சிறப்பு பாதுகாப்புப் படை இருக்கிறது. நம்முடையது மிகப்பெரிய ஜனநாயக நாடு. நீங்கள் பிரதமர். பின் நீங்கள் என்ன ஆபத்தை சந்திக்க நேரிடும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘பிரதமர் திரும்பிப் போனதற்குப் பாதுகாப்பு குறைபாடு காரணமல்ல; விசாரணைக்குத் தயார்’ – பஞ்சாப் முதல்வர்
“எந்த அச்சுறுத்தலும் இல்லை. யாரும் கற்களை எறியவில்லை. உங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுக்கு என்ன நடந்தது? பஞ்சாபில் உங்களுக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்படாது. குஜராத்தில் பிரதமரை மக்கள் தடுத்தபோது, அது தவறில்லை. வாரணாசியில் மக்கள் தடுக்கும்போது அது தவறில்லை. நீங்கள் பஞ்சாபில் தடுக்கப்படக் கூடவில்லை. நீங்களே திரும்பி சென்றீர்கள். ஆனால் இது மட்டும் உங்களுக்கு தவறு” என்று சரண்ஜித் சிங் சன்னி குறிப்பிட்டுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.