Aran Sei

‘எல்லைப் பாதுகாப்பு படைக்கான அதிகார நீட்டிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்’ – பிரதமருக்கு பஞ்சாப் முதலமைச்சர் கோரிக்கை

ல்லைப் பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி கோரிக்கை வைத்துள்ளார்.

சர்வதேச எல்லைகளில் இருந்து 15 கிலோமீட்டர் வரை எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு என்று இருந்ததை 50 கிலோமீட்டர் தூரம் வரை நீட்டித்து அண்மையில் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

தேசவிரோத சக்திகளுக்கு எதிராக செயல்படுதல், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய எல்லைகளை பாதுகாத்தல் ஆகியவற்றில் பஞ்சாப் காவல்துறை எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து செயல்படும் என பஞ்சாப் முதலமைச்சர் சன்னி உறுதியளித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக பிரதமரை சந்தித்து பேசவும் அவர் அனுமதி கோரியுள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களைத் தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பை நான்காவது கறுப்பு சட்டம் என்று பஞ்சாப் அமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில், முதலமைச்சர் இந்தக் கடிதத்தை பிரதமருக்கு எழுதியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பில் காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு மாநில பட்டியலின் கீழ் உள்ளதால், கூட்டாட்சி தத்துவத்தின்படி, இந்த விசயங்களை மாநில அரசு தான் கையாள வேண்டும் என சன்னி தெரிவித்துள்ளார்.

எல்லை பாதுகாப்பு படைக்கு எல்லைகளை பாதுகாப்பது முதன்மையான கடமையாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பில் ஈடுபட வேண்டியது மாநில அரசின் கடமை என பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source : NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்