நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தின் தேதியை மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தலைவர் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.
நேற்று(நவம்பர் 15), பாஜகவின் பஞ்சாப் கமிட்டி பொதுச் செயலாளர் ஜீவன் குப்தா எழுதிய கடிதத்தில், “10வது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் இரு மகன்களின் தியாக தினத்தை குழந்தைகள் தினமாக அனுசரிக்க வேண்டும். பஞ்சாபில் உள்ள ஃபதேகர் சாஹிப்பில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது உயிருடன் செங்கற் கல்களால் அடித்து கொல்லப்பட்ட இரண்டு மகன்களான ஜோராவர் சிங் மற்றும் ஃபதே சிங் ஆகியோருக்கு இது பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
“தற்போது, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவாக நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 1964 ஆம் ஆண்டு முதல்தான், குழந்தைகள் தினம் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு முன், நவம்பர் 20 அன்று அதற்கு தேதி நிர்ணயிக்கப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மரணத்திற்குப் பிறகு, அப்போதைய காங்கிரஸ் அரசு, குழந்தைகள் தின நாளை வலுக்கட்டாயமாக மாற்றியது. நவம்பர் 14க்கு பதிலாக ஜோராவர் சிங் மற்றும் ஃபதே சிங் ஆகியோரின் தியாக தினத்தில் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டால், அது குரு கோவிந்த் சிங் மற்றும் அவரது மகன்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஜீவன் குப்தா கூறியுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.