Aran Sei

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் விவசாய சங்கங்கள் – 117 தொகுதியில் போடியிட முடிவு

ஞ்சாபைச் சேர்ந்த 22 விவசாயிகள் சங்கங்கள் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஒரு கூட்டு முன்னணியை உருவாக்க முடிவு செய்துள்ளன.

சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என பெயரிடப்பட்ட இக்கூட்டு முன்னணி, பஞ்சாப்பில் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லையெனவும் விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

விவசாய சட்டங்களைக் நீக்கக் கோரி போராடிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, விவசாயிகளின் பிரச்சினைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும் அரசியலில் நாங்கள் இறங்க மாட்டோம் என்றும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா கூறியுள்ளது.

பாரதிய கிசான் யூனியனின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு – புதிய கட்சியைத் தொடங்கினர் ஹரியானா விவசாயிகள்

பாரதிய கிசான் யூனியன் (ராஜேவால்)-ன் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் புதிய முன்னணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.

போதைப்பொருள், வேலையில்லா திண்டாட்டம், அதன் பொருட்டு மாநிலத்தில் இருந்து இளைஞர்கள் இடம்பெயர்தல் போன்ற பல பிரச்சனைகளை பஞ்சாப் எதிர்கொண்டு வருகிறது என்றும் அவற்றைத் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம் என்றும் பல்பீர் சிங் ராஜேவால் கூறியுள்ளார்.

மற்றொரு விவசாயிகள் சங்க தலைவர் ஹர்மீத் சிங் காடியன் கூறுகையில், “பஞ்சாப்பில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். மக்களின் அழுத்தத்தின் காரணமாகவே நாங்கள் அரசியல் களத்தில் இறங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் தொடரும் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் – முடங்கியது ரயில் போக்குவரத்து

சம்யுக்த் சமாஜ் மோர்ச்சாவில் உள்ள விவசாய சங்கங்களான ராஜேவால் குழு, பாரதிய கிசான் யூனியன் (காடியன்), பாரதிய கிசான் யூனியன் (தோபா) மற்றும் பாரதிய கிசான் யூனியன் (மான்சா) ஆகிய சங்கங்கள், பஞ்சாப்பின்  தெற்கு மால்வா, டோபா மற்றும் மஜா பகுதிகளில் அவர்கள் கணிசமான அளவில் ஆதரவு பெற்றுள்ளன.

பஞ்பாப்பில் உள்ள மொத்த 117 சட்டப்பேரவை தொகுதிகளில் 69 மால்வாவிலும், 25 மஜாவிலும், 23 டோபாவிலும் உள்ளன. இந்த புதிய முன்னணியானது, ஏற்கனவே களத்தில் உள்ள கட்சிகளின் வாக்கு வங்கியை பாதிக்கலாம் என்று அம்மாநில அரசியல் விமர்சகர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் ஹரியானா பாரதிய கிசான் யூனியனின் தலைவர் குர்னாம் சிங் சாருனி, சன்யுக்த் சங்கர்ஷ் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்