Aran Sei

விவசாய சட்டத்தில், தனியார் மண்டிகளால் யார் பயன் பெறுவார்கள்? – மத்திய அரசுக்கு பஞ்சாப் முதலமைச்சர் கேள்வி

விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில நலனுக்காக விவசாய சட்டங்களை எந்த நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்றும் தற்போதுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை முறையைத் தொடர வேண்டும் என்றும் கோரி பஞ்சாப் சட்டசபையில் ஆளும் காங்கிரஸ் கட்சி  தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நேற்று (மார்ச் 5), பஞ்சாப் சட்டசபையில் இத்தீர்மானத்தை நிறைவேற்றியபின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ​​முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், விவசாய சட்டங்களுக்குப் பின்னால் உள்ள மத்திய அரசின் உண்மையான நோக்கத்தை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தும் விதமாக 10 கேள்விகளை எழுப்பியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி – ஆவணங்களை தந்தையிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

மேலும் அச்செய்தியில், “முறைப்படுத்தப்படாத தனியார் மண்டிகளால் யார் பயன் பெறுவார்கள்? கார்ப்பரேட்டுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், விவசாயிகள் நீதிமன்றங்களை நாடக் கூடாது என்ற விதியால் யாருக்கு நன்மை கிடைக்கும்? ” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்கான சூழலைக் கட்டியெழுப்பும் விதமாக, போராடும் விவசாயிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறு மத்திய அரசிடம் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘நான் போராட்டத்தில் இருந்தாலும், வயல்களை கிராமத்தினர் பார்த்துக் கொள்வார்கள்’ – ஒன்றிணைந்து அறுவடையை கையாளும் விவசாயிகள்

மத்திய அரசின் சிந்தனையற்ற, பிறருக்கு  மதிப்பளிக்காத அணுகுமுறைக்கு எதிராக சட்டசபை உறுப்பினர்களின் கோபத்தை இந்தத் தீர்மானம் வெளிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறையானது போராட்ட சூழலை மோசமாக்கி, விவசாயிகளிடையே அமைதியின்மையையும் வேதனையையும் அதிகரித்துள்ளதை இந்தத் தீர்மானம் வெளிக்காட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து, ஆளுநரின் உரையிற்கு பதிலளித்த முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைத் தேச விரோதிகள் என்று பாஜக தலைவர்கள் குறிப்பிடுவதை கண்டித்துள்ளார்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் – விவசாயிகள் போராட்டக் குழு முடிவு

மேலும், “பஞ்சாபின் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் தேசபத்தி,  இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக கடந்த ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில், தங்கள் இன்னுயிரைக் கொடுத்தவர்களின் தேசபக்தியை ஒத்தது என்று முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்