Aran Sei

தொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுரின் சட்டவிரோத கைது – ஹரியானா அரசிற்கு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தொழிற்சங்க செயல்பாட்டாளரும் 23 வயதான தலித் தொழிலாளியுமான நோதீப் கவுரை சட்டவிரோதமாகக் கைது செய்தது தொடர்பாக ஹரியான அரசிற்கு, பிப்ரவரி 12 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 12 ஆம் தேதி ஹரியானாவின் குண்டலி பகுதியில் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட நோதீப், கைது செய்யப்பட்ட வழக்கு குறித்தும், சிறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகச் சொல்லப்படும் புகார் குறித்தும், விளக்கமளிக்குமாறு ஹரியானா அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அந்தோலன்ஜீவி’கள் (பிழைப்புப் போராளிகள்): 1974 ல் அரசுக்கு எதிராகப் போராடிய போது

நோதீப் கவுரை ஹரியானா காவல்துறை ”சட்டவிரோதமாக சிறையில்” வைத்திருப்பது தொடர்பாக, பிப்ரவரி 6 மற்றும் 8 தேதிகளில் வந்த பெயர் கூறிப்பிடாத புகார்களை விசாரணைக்கு ஏற்று இருக்கிறோம் என நீதிமன்றம் கூறியதாக, அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நோதீப் கவுர் ஒரு மாத காலமாக சிறையில் இருப்பதாகவும், ஒரு வழக்கின் ஜாமீன் வழங்கப்பட்டும், மற்றொரு வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டும் இருக்கும் நிலையில், மூன்றாவது வழக்கின் விசாரணை பிப்ரவரி 16 ஆம் தேதி நடக்க இருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

நோதீப் கவுரின் கைதிற்கு இந்திய அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின்  உறவினரும், வழக்கறிஞருமான மீனா ஹாரிஸ் உள்ளிட்ட சர்வதேச தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

வெள்ளத்தில் பலியான உயிர்கள்: கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வது எப்போது? – கௌரவ் விவேக் பட்நாகர்

கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராடிவரும் டெல்லி-ஹரியானா எல்லைப்பகுதியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோனிபட் பகுதி குண்டலி தொழிற்நகரத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில், நோதீப் கவுர் பணிபுரிந்து வந்ததாக என்டிடிவி  கூறியுள்ளது.

நோதீப் கவுரை போலவே அவரது குடும்பத்தினரும் போராட்ட குணம் கொண்டவர்களாக இருப்பதாகவும், அவரது பெற்றோர்கள், பஞ்சாபில் இருக்கும் விவசாயிகள் சங்கத்திலும், டெல்லி பல்கலைகழக மாணவியான அவரது சகோதரி, ”மஜ்தூர் அதிகார் சங்கதான்” என்ற தொழிலாளர் நல சங்கத்திலும் உறுப்பினர்களாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியில் சேர்ந்த நான்கு மாதத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்ட நோதீப், ஜனவரி 12 ஆம் தேதி குண்டலி தொழிற்நகரத்தில், 20க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து ஊதிய உயர்வுக்காகப் போராடிய போது, காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்படுள்ளது”.

ப்ரேக் – அப் நல்லது – பொன் விமலா

பின்னர், கைது செய்யப்பட்ட நோதீப் கவுர் மீது கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், திருட்டு, கலவரம் ஏற்படுத்துதல், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய புகார்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கும், நோதீப் கவுரின் சகோதரி ராஜ்வீர் கவுர், காவல்துறையினர் நோதீப் கவுர் மீது  பாலியல் துஷ்பிரயோகங்களும், துன்புறுத்தல்களும் மேற்கொள்வதாகக் குற்றம் சாட்டி இருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”விவசாய தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கண்டு அரசாங்கம் அஞ்சுவதன் விளைவாகவே எனது சகோதரி குறி வைக்கப்பட்டிருக்கிறார்,” எனச் செய்தியாளர்களிடம் கூறிய ராஜ்வீர் கவுர், ”நோதீப் காவல்நிலையத்தில், ஆண் காவலர்களால், தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார். அவருடைய  அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் கடுமையான நடவடிக்கை வேண்டும்” எனக் கூறியுள்ளதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”போராட்டக்காரர்கள் தாக்கியதில் ஒரு பெண் காவலர் உட்பட ஏழு காவல்துறயினை காயமந்திருக்கின்றனர். பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானார் என்பது ஒரு கற்பனை, அதை முற்றிலும் மறுக்கிறோம். மேலும் கவுருடன் இரண்டு பெண் காவலர்கள் எப்போது இருக்கின்றனர்” என சோனிபட் காவல் நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, அதில் என்டிடிவி கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்