Aran Sei

திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் சுரண்டலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்ற வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்றம்

credits : india legal

திருமணம் செய்து கொள்வதாக போலியாக உறுதியளித்து பாலியல் சுரண்டலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் இயற்றவேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் வழக்குகளில் மிகுந்த கவனத்தோடு செயல்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

‘பெகசிஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் மனு

இதுகுறித்து உத்தரவிட்ட நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு, “நிலப்பிரபுத்துவ மற்றும் ஆணாதிக்க சிந்தனையோடு பெண்களை வெறும் போகப்பொருளாக எண்ணும் போக்குகெதிராக ஆரோக்கியமான சமுகத்தைக் கட்டமைக்கும் வகையில் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கபடவேண்டும் ” என்று கூறியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி  பெண் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட  நபரின் பிணை மனு கீழமை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து   உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

source; the indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்