ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் (என்சிபி) கைது செய்யப்படும்போது, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட தனியார் துப்புரவாளர் கிரண் கோஸ்வாமியை கைது செய்ய புனே காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதி சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆர்யன் கான் வழக்கில், கிரண் கோஸ்வாமியை சாட்சியாக என்சிபி சேர்த்துள்ளது.
மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக சின்மய் தேஸ்முக் என்பவரிடம் ரூ. 3.09 லட்சம் பண மோசடி செய்தது தொடர்பாக, மே 29, 2018 தேதி பர்ஷனா காவல் நிலையத்தில் கிரண் கோஸ்வாமிக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், 2007 ஆம் ஆண்டு அந்தேரி காவல்நிலையத்தில் ஒரு வழக்கும், 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு தானே காவல்நிலையத்தில் இரண்டு வழக்கும் கேஸ்வாமி மீது பதியப்பட்டுள்ளன.
கிரண் கோஸ்வாமியை கைது செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள புனே காவல் ஆணையர் அமிதாப் குப்தா, அவர் நாட்டை விட்டுத் தப்பிவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
என்சிபி சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளின்போது பாஜகவுடன் தொடர்புடைய மனிஷ் பனுசாலி/ கிரண் கோஸ்வாமி ஆகியோர் இருந்த காணொளிகளை தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிரா அரசின் அமைச்சருமான நவாப் மாலிக் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு மிரட்டல்கள் வருவதால் அவருக்குப் பாதுகாப்பை அதிகரித்து இருப்பதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.