Aran Sei

கொரோனா தொற்று – தந்தை உயிரிழந்து, தாயும் தம்பியும் பாதிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவப் பணிக்குத் திரும்பிய மருத்துவர்

காராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சஞ்சீவன் மருத்துவமனையில், பணிபுரியும் மருத்துவர் முகுந்த் பெணுர்க்கரின் தந்தை கொரோனா தொற்றால் இறந்த மூன்று நாட்களிலேயே, அவர் மீண்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க, பணிக்குத் திரும்பியுள்ளார் என்று என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மேலும், மருத்துவர் முகுந்த் பெணுர்க்கரின் தம்பியும் அவரது தாயும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “எங்கள் மருத்துவமனையில் என் தந்தையை காப்பாற்ற முயன்றோம், ஆனால், அவர் ஏப்ரல் 26 அன்று உயிரிழந்தார். என் தாயும், தம்பியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், தற்போது அவர்கள் நலமுடன் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

 மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டாங்கரில் இருந்து வாயுக்கசிவு – 22 பேர் உயிரிழப்பு

மேலும், “உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுவதே, தற்போது என் தந்தைக்காக நான் செய்யும் சிறந்த கடமை. சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் , இப்போது , குடும்ப உறுப்பினர்கள் கூட தங்கள் அன்பானவர்களைச் சந்திக்க முடியாத நிலைமையே உள்ளது. நாம் ஒரு கடினமான காலத்தை எதிர்கொண்டு வருகிறோம், அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்,” என்றும் மருத்துவர் முகுந்த் பெணுர்க்கர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்