2022 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான காஷ்மீரி புகைப்பட பத்திரிகையாளரான சன்னா இர்ஷா மட்டூ, வெளிநாட்டிற்கு பயணம் செய்ய குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
பாரிஸ் செல்வதற்காக பிரான்ஸ் நாட்டு விசாவுடன் விமான ஏற டெல்லி விமான நிலையம் வந்த அவரை, குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “செரெண்டிபிட்டி ஆர்ல்ஸ்கிராண்ட் 2020 விருது பெறும் 10 பேரில் ஒருவராக புத்தக வெளியீட்டு விழா மற்றும் புகைப்பட கண்காட்சிக்காக பாரிஸ் செல்ல திட்டமிட்டிருந்தேன். நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுத்த அதிகாரிகள், அதற்கான காரணத்தை கூறவில்லை. ஆனால், அவர் சர்வதேச அளவில் பயணிக்க முடியாது என்று மட்டும் தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.
ஃப்ரீலான்ஸ் புகைப்பட கலைஞரான மட்டூ, ராய்ட்டர்ஸில் வெளியிட்ட புகைப்படத்திற்காக மே 2022ல் அவருக்குப் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டது.
காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தில் கன்வெர்ஜென்ட் ஜர்னலிசத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள சன்னாவின் படைப்புகள் உலகெங்கிலும் பல இடங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 2021-ல் மதிப்புமிக்க மேக்னம் அறக்கட்டளையில் அவருக்குப் பெல்லோஷிப் வழங்கப்பட்டது.
எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு காஷ்மீர் பத்திரிகையாளர் நாட்டை விட்டு வெளியேறுவது தடுத்து நிறுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. செப்டம்பர் 2019 இல், ஒன்றிய அரசு 370 வது சட்டப் பிரிவை நீக்கி பிறகு, பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கௌஹர் கிலானி புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பான் நகருக்கு பயணம் செய்ய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.
Source: The Wire
வன்மத்த கக்குறது, கலவரத்த தூண்டுறது… வேலை சோலியே கிடையாதா? | Vikraman VCK | Nupur Sharma | Modi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.