Aran Sei

புதுச்சேரி: பள்ளியை மூடச் சொன்ன பாஜகவினரை விரட்டியடித்த பெற்றோர்கள்

திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பேச்சு இந்துக்களை அவமதித்ததாக கூறி இந்து அமைப்புகள் ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர். பள்ளியை மூட வற்புறுத்திய பாஜகவினரை சூழ்ந்து கொண்டு வெளியே போ, வெளியே போ என பெற்றோர்கள் விரட்டியுள்ளனர்.

புதுக்கோட்டையில் தலித் மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த ஆதிக்கச் சாதியினர் – ‘அரண்செய்’ யின் கள ஆய்வு

புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில்  வழக்கம் போல் அன்றாட பணிகள் தொடர்கின்றன. இந்த நிலையில் உப்பளத்தில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்த பாஜகவினர் சிலர் பள்ளியை விடுமுறை அறிவித்து மூடுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் காலாண்டு தேர்வு நடைபெறுவதால் விடுமுறை அளிக்க முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் பிள்ளைகளை பள்ளியில் விட்டுச்சென்ற பெற்றோர்கள் பாஜகவினரின் செயலை கண்டு அவர்களை சூழ்ந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளியை விட்டு வெளியே போ, வெளியே போ என்று பெற்றோர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற முதலியார்பேட்டை காவல்துறையினர் பள்ளியில் இருந்து பாஜகவினரை வெளியேற்றினர்.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மனு

இதனிடையே வில்லியனூரில் சென்னை- விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்துகளையும் வழிமறித்து சிலர் கல்வீசி தாக்கினர். இந்த சம்பவத்தில் 4 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் முழுவதும் உடைந்து சேதமடைந்தன. இது தொடர்பாக ஓட்டுனர்கள் அளித்த புகாரின் பேரில் கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியவர்களை காவல்துறையினர்  தேடி வருகின்றனர்.

Protest against chennai Paranthur airport | green airport is against environment | Sebastian | DMK

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்