Aran Sei

புதுச்சேரியில் திமுக தனித்து போட்டி: “ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்” – ஜெகத்ரட்சகன்

credits : the hindu

புதுச்சேரியில், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் புதுச்சேரியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று தேர்தல் பணியை தொடங்கிய ஜெகத்ரட்சகன், பேரணியிலும் அதைத்தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய திமுக வடக்கு மாநில செயலாளர் சிவக்குமார், புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளராக “ஜெகத்ரட்சகனை” அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து பேசிய ஜெகத்ரட்சகன், 23 ஆண்டுகளுக்கு முன், கருப்பு சிவப்பு கொடி பறந்த புதுச்சேரி மண்ணில், மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று தெரிவித்தார்.

ஜனநாயகத்தைப் பற்றி காங்கிரஸ் பாடம் எடுக்க வேண்டாம் : ராகுல்காந்திக்கு மோடி பதில்

”இப்போது புதுச்சேரியை பார்க்கும் போது வயிறு எரிகிறது. இந்த மண்ணின் மைந்தன் நான். இந்த மாநிலம் தான் நமக்கு முக்கியம். ஏன் மாநிலத்திற்கு நன்மைகள் செய்ய முடியாது? ஏன் ஆலைகளை திறக்க முடியாது? ஏன் வேலை வாய்ப்புகளை வழங்க முடியாது? புதுச்சேரிக்கு இதுவரை என்ன திட்டம் தீட்டியிருக்கிறீர்கள்?” என்று முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை ஜெகத்ரட்சகன் கடுமையாக விமர்சித்தார்.

புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடத்தும் பாஜக – கிரண் பேடியை திரும்பப் பெறுக : நாராயணசாமி எச்சரிக்கை

தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் எனக்கு ஒரு உறுதி தர வேண்டும். 30 தொகுதியிலும் வெற்றி பெற்று தர வேண்டும். இல்லையென்றால் இந்த மேடையிலேயே நான் தற்கொலை செய்துக்கொள்வேன்” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உணர்ச்சி வயப்பட்டு பேசினார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்த நிலையில், புதுச்சேரியில் திமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

’திமுகவுக்கு காங்கிரஸ் செலவல்ல வரவு; தொகுதி பங்கீட்டில் திமுக எங்களுக்கு அநீதி இழைக்காது’ – வீரப்ப மொய்லி

காங்கிரஸ் நிச்சயம் திமுக-வுக்கு செலவாக அல்லாமல் வரவாக இருக்கும் என்றும், தொகுதி பங்கீட்டில் திமுக எங்களுக்கு அநீதி இழைக்காது என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் பார்வையாளர்களில் ஒருவரான, வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்