Aran Sei

”கொரோனா இரண்டாம் அலை உருவாக பொதுமக்களே காரணம்” : சமூக வலைதளங்களில் விமர்சனமான சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்து

credits : the indian express

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ளதற்கு பொது மக்கள் தான் காரணம் என கூறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று பாதிப்பு, அதன் பின்னர் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. நிபுணர்கள் இரண்டாம் அலை உருவாவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்று கூறியிருந்தனர்.

ஆனால், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம், பொது மக்கள் தான் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : எல்லைகளை மூடிய நியூசிலாந்து

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள  அவர், ”கொரோனா இரண்டாம் அலை உருவாகியுள்ளதற்கான காரணம் மக்களிடம் ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாது தான். அவர்கள் அனைத்து விஷயத்தையும் மிகவும் இயல்பாகவே எடுத்துக் கொள்கின்றனர். பொது மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவே இல்லை” என்று கூறியிருந்தார்.

இந்தியாவில் சமூகப் பரவல் – முதல்முறையாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு

”மக்கள் கொரோனா நோய்த்தொற்று பரவலை ஒரு விஷயமாகவே பொருட்படுத்தவில்லை. அவர்கள் முகக்கவசம் கூட அணிவதில்லை, அவ்வாறு அணிந்திருந்தாலும் அதை ஒழுங்காக கூட அணிவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.

பதஞ்சலி மருந்து குறித்து ஹர்ஷவர்தன் விளக்கமளிக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் சங்கம்

இந்நிலையில், இந்தியாவில் இரண்டாவது அலை உருவாகியுள்ளது. இதற்குப் பொது மக்களைக் குறைக்கூறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

”இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1.15 லட்சம் கொரோனோ நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்களைத் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். கடந்த 5 நாட்களில் ஏறக்குறைய 40க்கும் மேற்பட்ட பிரதமரின் தேர்தல் பேரணி சார்ந்த புகைப்படங்களையும்/ காணொளிகளையும் பகிர்ந்திருக்கிறாரர்” என்று ஏஎல்டி நியூசின் நிறுவனர் பதிவிட்டுள்ளார்.

‘இந்தியர்கள் பரிசோதனை எலிகளா?’ – கொரோனா தடுப்பு மருந்து குறித்து சுப்பிரமணியன் சாமி கேள்வி

”அசாம் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று இல்லை, பொதுமக்கள் யாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை” என்று கூறிய அசாம் (பாஜக) அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறியதும், கொரோனா ”நோய்த்தொற்று தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு ஹர்த்வார் கும்பமேலா விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படும். நம்பிக்கை கொரோனா நோய்த்தொற்றை வீழ்த்தும்” என உத்தரகாண்ட் முதல்வர் (பாஜக) திரத் சிங் ராவ்த் கூறியதும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு தப்லிகி ஜமாத் அமைப்பைக் காரணம் காட்டிய பாஜக அரசு, தற்போது இரண்டாம் அலைக்கு காரணம் ஹோலி பண்டிகை என கூறாமல் இருப்பது ஏன்? என ஸ்க்ரால் இணையதளம் கேள்வியெழுப்பியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்