Aran Sei

‘நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்’ – அமைச்சர் செங்கோட்டையன்

Image Credits: The Hindu

டப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் எனப் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். இந்தக் கல்வியாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக இருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்வை நடத்த அருகதையற்றவர்கள் கல்விக்குத் தரம் நிர்ணயிப்பது வேடிக்கை – கனிமொழி எம்.பி

சென்னை அமைந்தகரையில் அம்மா மினி கிளினிக்கை துவங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி. பாடத்திட்டம் குறைக்கப்பட்ட போதிலும் தேர்வு நடைபெறும். இந்தக் கல்வியாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக இருக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.

“பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவர் படம் காவியில் இடம்பெற்றதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்தத் தவறை செய்தவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காவி திருவள்ளூவர் : தவறுதலாக ஒளிபரப்ப பட்டுவிட்டது – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலால் கடந்த 7 மாத காலமாகப் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, கல்வி நிறுவனங்களனும் திறக்கப்படாமல் உள்ளன. அதே வேலையில் இணைய வழியாக வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க அரசு முடிவெடுத்த நிலையில், பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டத்தின் சாதகமற்ற பதில்கள் வந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது.

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்த செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் அதற்கான சூழல் அமையுமா என்ற கேள்வி எழுந்ததுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையின் பதில் தற்போது நீடித்து வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்