Aran Sei

சுற்றுச்சூழல் திட்டங்களை விரிவுபடுத்துவதற்குப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்க தேவையில்லை – ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு

சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தளர்த்தியுள்ளது. இது சம்பந்தமாக ஏப்ரல் 11 ஆம் தேதி ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

வடகிழக்கு மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை

40 விழுக்காடு வரை விரிவாக்கம் செய்யப்படவுள்ள திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்து கேட்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 5 விழுக்காட்டிற்கும் அதிகமாக விரிவாக்கம் செய்யப்படும் திட்டங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் கருத்து கேட்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

சுரங்க விரிவாக்கம், நவீனமயமாக்கல் காரணமாக விரிவாக்கம், துறைமுகங்கள்/துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்துதல், சாலைகளை விரிவுபடுத்துதல் ஆகிய திட்டங்களுக்குப் பொது விசாரணை தேவையில்லை என் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் இந்தியப் பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டுத் தாக்கப்படுகின்றனர் – மனித உரிமைகள் குறித்த அமெரிக்க அறிக்கை தகவல்

2017 ஆம் ஆண்டில் நிலக்கரி சுரங்கங்களை 40 விழுக்காடு வரை விரிவாக்கம் செய்வதிலும், 2021 இல் இரும்பு, மாங்கனீசு, பாக்சைட் மற்றும் சுண்ணாம்புக் கற்கள் மற்ற சுரங்கங்களை 20% வரை விரிவாக்கம் செய்வதிலும் பொதுமக்கள் கருத்துக் கேட்பு நீக்கப்பட்டுள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் ஒன்றிய அரசின் இந்த முடிவை எதிர்த்து வருகின்றனர்.

Source : newindianexpress

சென்னை அயோத்யா மண்டப சர்ச்சை குறித்துப் பேசுகிறார் தோழர் மருதையன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்