Aran Sei

விவசாயிகள் போராட்டம்: உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறு,குறு, நிலமற்ற விசாயிகள் – ஆய்வில் தகவல்

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் சுமார் ஓராண்டாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்ட களத்தில் உயிரிந்த விவசாயிகளில் பெரும்பாலானோர் சிறு, குறு மற்றும் நிலமாற்ற விவசாயிகள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் லக்விந்தர் சிங், பல்தேவ் ஷெர்கில் உதவி பேராசியர் தல்வாண்டி சாபோ ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

2020 நவம்பர் 21 (விவசாயிகள் போராட்டம் தொடங்கிய நாள்) முதல் 2021 அக்டோபர் 21 வரையில் போராட்ட களத்தில் உயிரிழந்த விவசாயிகள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்த பேராசிரியர் குழு, அவர்களில் பெரும்பாலானவர்கள் 3 ஏக்கருக்கு குறைவான நிலத்தில் விவசாயம் செய்து வந்தவர்கள் அல்லது நிலமற்ற விவசாயிகள் என்பதை கண்டறிந்துள்ளனர்.

போராட்டத்தில் பெரும்பாலும் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டிருப்பதால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் விவசாயிகள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பஞ்சாபில் அதிக அளவு விசாயம் நடைபெறும் மல்வா பகுதியை சேர்ந்த விவசாயிகள்தான் அதிக அளவில் உயிரழந்துள்ளனர் என்பதும் அவர்களே அதிக அளவு போராட்டத்திலும் கலந்கொண்டுள்ளதும் பஞ்சாப் பல்கலைக்கழக பேராசியர்கள் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்