Aran Sei

’அனைவருக்கும்  முதலில் தடுப்பூசியை வழங்குங்கள் பிறகு மக்களிடம் பேசுங்கள்‘ – பிரதமரின் மன் கி பாத் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

முதலில் நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலில் தடுப்பூசியை வழங்குங்கள், பிறகு மக்களிடம் பேசுங்கள் என பிரதமரின் மன் கி பாத் உரைகுறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மாதம்தோறும் ஞாயிற்கிழமைகளில் வானொலியில் பேசும் பிரதமர் மோடி, இன்று 78வது முறையாக உரையாற்றினார். அதில், “கொரோனா இன்னும் ஒழியவில்லை. எனவே வதந்திகளை புறந்தள்ளிவிட்டு, அறிவியலை நம்ப வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “முதலில் நாட்டு மக்களுக்கு அனைவருக்கும் தடுப்பூசி வழங்குங்கள். பிறகு, மன் கி பாத்தில் மக்களிடம் உரையாற்றுங்கள்” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில், “செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், தடுப்பூசி பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வருவது. மற்ற அனைத்து பிரச்னையை திசை திருப்ப மட்டுமே செய்யும்” என அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த பதிவிகளில் அவர் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் தொடர்பான வரைபடை ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்