Aran Sei

பாலியல் தொழிலாளர்களுக்கு உடனடியாக உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் – கவுஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தொற்று பெருகி வருவதால் பாதிப்படைந்துள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க வேண்டுமென கவுஹாத்தி உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சச்சார் மாவட்டத்தின் சில்ச்சர் பகுதியில் வசிக்கும் தேபஜித் குப்தா என்பவர் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளான சுதன்சு துளியா மற்றும் மனஸ் ரஞ்சன் பதக் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுப்பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்யத் தடைவிதிக்கக்கூடாது – உச்சநீதி மன்றத்தில் மனு

கடந்த செப்டம்பர் 2020 உச்சநீதிமன்றம், பாலியல் தொழிலாளர்கள் கண்ணியதோடு வாழ உரிமையுள்ளது என்று தெரிவித்ததையும் மேற்கோளாகக் கூறியுள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமென சச்சார் மாவட்டத்தின் துணைக் காவல்கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலருக்கும் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

சோனாகச்சி பாலியல் தொழிலாளர்களின் அவல நிலை: கொரோனாவால் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி

மேலும், “இந்த அவசர கால சூழலில், பாலியல் தொழிலாளர்களுக்குக் காலதாமதமின்றி  இன்றே உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும்” என்று கவுஹாத்தி உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்