பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டத்தில், கூலி குறைவாக அளிப்பதால் பணிக்குச் செல்லமாட்டோம் என்று போராடிய தலித் பெண்ணை நிலவுடைமையாளர் தாக்கியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜுன் 15 அன்று, கூலிக் குறைவாக அளிப்பதால் வேலைக்கு வரமாட்டோம் என்று கூறிய பட்டியல் சமூகத்தைச்சார்ந்த விவசாயக்கூலிகளுக்கும், நிலவுடைமையாளருக்கும் இடையே நடந்த கூட்டத்தின் போது நிலவுடைமையாளர் அந்த தலித் பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தப் பெண்ணைத் தாக்கிய நிலவுடைமையாளரை காவல் துறை கைது செய்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட அந்தக் கிராமத்தின் தலைவரையும் கைது செய்ய வேண்டுமென பட்டியல் சமூகத்தினர் போராடியுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள மசூதார் முக்தி மோர்ச்சாவின் தலைவர் பகுவாட் சாமோ, இந்த விவகாரத்தில் தலித் பெண் விவசாயக்கூலி தாக்கபட்டதற்கு கிராமத் தலைவரும் உடந்தையென்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்
இந்த விவரம் தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்க வேண்டுமென்று தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் அந்தப் பகுதியின் துணை ஆணையர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், பஞ்சாப் அரசின் தலைமைச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி வயர் செய்தியில் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.