சத்தீஸ்கர் மாநிலம் சிலேஜ்ர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் அமைத்த முகாமுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக பழங்குடியினர் போராட்டம் நடத்தி வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மே 17 அன்று, முகாமை அகற்ற வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர், மேலும், இவர்களை மாவோயிஸ்ட் என்று பாதுகாப்பு படையினர் கூறியிருந்தனர்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மோதல் – 22 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு
இந்நிலையில், பாதுகாப்பு படையினரின் முகாமை அகற்ற வேண்டுமெனவும், இறந்த மூன்று பழங்குடிகளுக்கும் உரிய நீதி கிடைக்கவேண்டுமெனக் கோரி 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள பழங்குடிகளில் ஒருவரான சஞ்சய் மார்கம்,” இது எங்களின் நிலம், உரிமை, சுதந்திரத்திரத்திற்கான போராட்டம், நாங்கள் சாலைகள் போடுவதை எதிர்க்கவில்லை ஆனால் எங்களுக்குப் பள்ளியும், மருத்துவமனைகளுமே தேவை.எங்கள் பகுதியில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முகாமுக்கு எதிராகவே நாங்கள் போராடுகிறோம்” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து
செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, போராட்டக்களத்தில் பழங்குடியினர் நினைவுத்தூணை வைத்துள்ளதாகவும், இந்த மூவர் மட்டுமல்லாது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு கர்ப்பிணிப்பெண் இறந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முகாம் அகற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என பழங்குடியினர் அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி குறிப்பிடுகிறது.
தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படை: பலியான திமாசா தேசிய விடுதலைப்படை போராளிகள்
எனினும், இந்த போராட்டம் மாவோயிஸ்ட்களின் தூண்டுதலின் பேரில் நடப்பதாக பாதுகாப்புப் படையினர் கருதுவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.