Aran Sei

அறுவடை முடிந்து டெல்லிக்கு திரும்பும் பஞ்சாப் விவசாயிகள்: போராட்டம் வலுவடைவதாக விவசாயிகள் சங்கம் தகவல்

ங்கள் வயல்களில் அறுவடையை முடித்துக்கொண்டு, டெல்லி போராட்டக்களங்களை நோக்கி விவசாயிகள் திரும்பத் தொடங்கியுள்ளனர் என்று சம்யுக்த் கிசான் மோர்சா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களை நீக்க கோரி போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் உள்ள சிங்கு மற்றும் திக்ரி எல்லைக்கு ஏராளமான விவசாயிகள் திரும்பியுள்ளனர். பஞ்சாபிலிருந்து இங்கு வருபவர்களுக்கு பல இடங்களில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. டிராக்டர்கள், கார்கள் மற்றும் பிற வாகனங்களில் பயணித்து திரும்பி வரும் இவர்கள், அறுவடைக்கு செல்வதற்கு முன்பு தங்கியிருந்த அதே கூடாரங்களில் தங்கிக்கொள்வார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘போராட்டக்களங்களில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது’ – வலுவிழக்கிறதென ஒன்றிய அரசு பொய் கூறுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

“விவசாயிகளின் போராட்டம் வலுவடைந்து வருகிறது. போராட்டக்களங்களும் பெரிதாகி வருகின்றன. கடந்த ஐந்து மாதங்களாக, விவசாயிகளின் கூடாரங்களும், வாகனங்கள் மீது கட்டப்பட்ட கூடாரங்களும் நிரந்தரமாக உள்ளன. அறுவடை முடிந்து விவசாயிகள் திரும்பும் காலம் தொடங்கிவிட்டது.” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொது சுகாதார அமைப்பின் மோசமான நிர்வாகத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துக்கொண்டிருக்கும் நிலையிலும், அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது என்று சம்யுக்த் கிசான் மோர்சா விமர்சித்துள்ளது.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்