Aran Sei

ஹரியானா மாநில அரசு அமைத்தக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்போவதில்லை – விவசாய சங்கம் அறிவிப்பு

ரியானா மாநில அரசு அமைத்த குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்போவதில்லையென வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாய சங்கம் அறிவித்துள்ளது.

குண்டுளி-சிங்கு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் முற்றுகையை அகற்றுவது குறித்து  பேச்சுவார்த்தை நடத்த கடந்த வாரம் ஹரியானா மாநில அரசுக் குழுவை அமைத்திருந்தது.

மேலும், கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) ராஜீவ் அரோராவை  தலைவராகவும், காவல்துறை உயர் அதிரிகளை உறுப்பினர்களாகவும்  நியமித்திருந்தது.

இதேவேளையில், போராட்டம் நடைபெற்றுவரும் சாலையின் வழியாக சாமானியர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக விவசாயிகளைச் சந்தித்த சோனிபட் துணை ஆணையர் லலித் சிவாச் கூறியிருந்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அரசு தவறாகப் பயன்படுத்தியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கூடாது என்பதில் அரசு  விடாப்படியாக இருக்கிறது. கடந்த ஜனவரி 22 க்கு பிறகு விவசாயப் பிரதிநிதிகளுடன் அரசு  எவ்விதப் பேச்சுவார்த்தை   நடத்தவில்லை என்றும்  சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

Source:THE WIRE 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்