Aran Sei

‘கொரோனா பாதுகாப்பில் பாஜகவின் போலித்தனங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன’ – விவசாயிகள் சங்க தலைவர் கருத்து

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், விவசாய சட்டங்களை நீக்க கோரி போராடும் விவசாயிகள் தங்கள் போராட்டக்களங்களில், தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஏப்ரல் 9) நாடு முழுவதும் ஒரே நாளில் 1,31,968 கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், இப்பரவல் குறித்து பேசிய அகில இந்திய கிசான் சபையின் துணைத் தலைவர் லக்பீர் சிங், நாங்கள் முக கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவற்றின் அவசியத்தை பற்றி தொடர்ந்து அறிவித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

” ஷாஹீன் பாக் போராட்டத்தை கலைத்தது போல விவசாயிகள் போராட்டத்தை கலைக்க நினைக்க வேண்டாம் ” – ராகேஷ் திகாயத்

பாரதிய கிசான் யூனியனின் பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங், “கொரோனா தடுப்பூசி போட நாங்கள் போராட்டக்காரர்களை ஊக்குவிக்கிறோம். ஒருவருக்கு காய்ச்சல், சளி அல்லது வேறு ஏதேனும் தொற்று அறிகுறிகள் இருந்தால், போராட்டக்களத்தில் உள்ள மருத்துவர்கள் உடனே வந்துவிடுவார்கள். அந்நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் அல்லது 8-10 நாட்களுக்கு அவரின் கிராமத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்.” என்று தெரிவித்துள்ளார்.

போராட்டக்களத்தில் செய்யப்பட்டுள்ள தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ், “போராட்டக்களம் எதுவும் கோவிட்  ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்படவில்லை. நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்றால், இங்கு ஒவ்வொறு இடத்திலும் க்ளீனிக்குகள் உள்ளன. ஒவ்வொரு போராட்டக்களத்திலும் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு மருத்துவமனைகள் உள்ளன. காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை அதிகரித்திருந்தால் உடனடியாக அவர்கள் அந்த மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுவர்.”  என்று குறிப்பிட்டுள்ளார்.

என்று தணியும் இந்த வேள்வித் தீ – விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உயிர் துறந்த ஆசிரியர்

மேலும், “கொரோனா தொற்று பரவலால், விவசாய போராட்டத்தைக் கலைக்க வேண்டும் என்று அவர்கள் (மத்திய அரசு) கூறுவார்களேயானால், முதலில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தைத் தடை செய்திருக்க வேண்டும். அதைவிட அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, பாஜகவின் பேரணிகளை தடை செய்வது. அப்பேரணிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருங்கூட்டங்களுக்கிடையில் உரையாற்றுகிறார். இதன் வழியாகவே இவர்களின் போலித்தனங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன.” என்று பாஜக தலைமையிலான மத்திய அரசை ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் விமர்சித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்