Aran Sei

பிரதமரின் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியைக் கலாய்த்த விவசாயிகள்

Image Credits: NDTV

பிரதமரின் மாதாந்திர மன் கி பாத் (மனதின் குரல்) உரை இன்று காலை ஒளிபரப்பானது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பியும் தட்டுகளைத் தட்டியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கு எல்லை, பஞ்சாபில் ஃபரிட்கோட் மற்றும் பாஜக ஆளும் ஹரியானாவில் ரோஹ்தக் ஆகிய மூன்று இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஐந்து சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியடைத்துள்ளன. விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் போராட்டத்தைக் கைவிடமாடோம் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

டெல்லி – மீரட் நெடுஞ்சாலையை கைப்பற்றிய விவசாயிகள் – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில், இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் உரையின் போது தட்டுகளைத் தட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் அறிவித்தனர். இந்தப் போராட்டத்திற்கு ‘தாலி பஜாவோ’ (தட்டைத் தட்டுங்கள்) என்று பெயர் சூட்டப்பட்டது.

“டிசம்பர் 27 அன்று பிரதமர் தனது மன் கி பாத் வானொலி உரையை வழங்கும்போது, ​​விவசாயிகள் ‘உங்கள் மன் கி பாத் சொல்வதைக் கேட்டு நாங்கள் சோர்வாக இருக்கிறோம், எங்கள் மன் கி பாத்தை நீங்கள் எப்போது கேட்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினோம்’. எனவே அவரது மன் கி பாத்தின் சத்தம் எங்களை அடையாதபடி நாங்கள் பாத்திரங்களை அடித்து ஒலியெழுப்பிக்கொள்கிறோம்” என்று போராட்டத்தை அறிவித்தபோது ஸ்வராஜ் இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவ் கூறினார்.

பொதுமுடக்கம் தொடங்கியவுடன் கொரோனா வைரஸுடன் போராடும் முன்னணி தொழிலாளர்களை பாராட்டுவதற்காக ‘கரகோஷங்களை எழுப்புங்கள்’ என்றும் ‘பாத்திரங்களை அடித்து ஒலி எழுப்புங்கள்’ என்றும் யோசனை சொன்னார். இதை பற்றியும் இன்றைய மன் கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்