Aran Sei

விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – நாடாளுமன்றம் நோக்கி தினமும் ட்ராக்டர் பேரணி செல்ல விவசாயிகள் முடிவு

ஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் 26-ம் தேதி டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் ஒன்றுக்கூடி, விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடைந்ததை அனுசரிக்க உள்ளனர்.

டெல்லி எல்லைகளில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, எல்லைகளில் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் மாநில அளவில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், நவம்பர் 29 ஆம் தேதி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதால், கூட்டத்தொடர் முடியும் வரை, தினமும் 500 விவசாயிகள் டிராக்டர்களில் அமைதியாக பயணித்து நாடாளுமன்றம் செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(நவம்பர் 9), டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற மோர்ச்சாவின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் பொதுச் செயலாளர் ஹரிந்தர் சிங் லகோவால், “பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லி எல்லைகள் அனைத்திலும் பெரும் அளவிலான விவசாயிகள் கூடுவார்கள். அங்கு ஒன்றிய அரசின் விவசாய சட்டங்களை நீக்கக் கோரி பெரிய கூட்டங்கள் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்