Aran Sei

‘மிஷன் உ.பி, உத்தரகண்ட், லக்னோவை டெல்லியாக மாற்றுவோம்’ – அடுத்தக்கட்ட திட்டங்களை அறிவித்த போராடும் விவசாயிகள்

த்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னோவுக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் செப்டம்பர் 05 ஆம் தேதிக்கு பிறகு விவசாயிகளால் முடக்கப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்துள்ளார்.

நேற்று (ஜூலை 26), யோகேந்திர யாதவ், ஷிவ்குமார் கக்கா உள்ளிட்ட விவசாயிகள் சங்க தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘லக்னோ டெல்லியாக மாறும்’ என்று எச்சரித்ததுடன், ‘மிஷன் உத்தரபிரதசேதம் மற்றும் உத்தரகண்ட்’ என்கிற திட்டத்தையும் அறிவித்துள்ளார்.

இந்த இரு மாநிலங்களிலும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

பெண் விவசாயிகளின் நாடாளுமன்றம் அவர்களின் ஆளுமையை பிரதிபலிக்கிறது – விவசாயிகள் சங்கம்

“நாங்கள் மிஷன் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் என்ற திட்டத்தைத் தொடங்கவிருக்கிறோம். இது விவசாயிகள் போராட்டத்தை அதிகம் கவனப்படுத்தலுக்கு உள்ளாக்கும், மேலும் தீவிரப்படுத்தும். பெரிய பேரணிகள் விவசாயிகள் மகாபஞ்சாயத்து ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். மேலும், இப்போராட்டங்கள் பாஜகவுக்கும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் எதிரான எதிர்ப்பை, கிராமப்புறங்கள் வரை கொண்டு சேர்க்கும்.” என்று ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

source; ani

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்