Aran Sei

’ஏப்ரல் 21 அன்று விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் டெல்லி நோக்கி பேரணி’ – விவசாயிகள் அறிவிப்பு

ப்ரல் 21-ம் தேதி, விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்கள் ஒன்றிணைந்து டெல்லி நோக்கி பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக பாரதிய கிசான் யூனியன் அறிவித்துள்ளது.

நேற்று (ஏப்ரல் 13), பஞ்சாப் மாநிலம் பத்திந்தா  மாவட்டத்தில், ஜாலியன்வாலா பாக் படுகொலையில் கொல்லப்பட்ட தியாகிகளுக்கான அஞ்சலி கூட்டத்தில், பாரதிய கிசான் யூனியனின் மாநில தலைவர் ஜோகிந்தர் சிங் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

‘விவசயிகளிடையே வன்முறையைத் தூண்டும் பாஜக’ – விவசாயிகள் சங்கத்தலைவர்கள் குற்றச்சாட்டு

அப்போது, “ஏப்ரல் 21-ம் தேதி டெல்லியை நோக்கி பேரணி நடைபெறும். அப்பேரணிக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கோக்ரிகலன் மற்றும் மாநில பொருளாளர் ஜந்தா சிங் ஜெஹ்துகே ஆகியோர் தலைமை தாங்குவார்கள். விவசாயிகள் தமது உரிமைகள் கிடைக்கும் வரை மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வார்கள்.” என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

“ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குப் பின்னர், சாதி, மதம் கடந்து ஒன்றிணைந்த மக்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். அதேபோல், நரேந்திர மோடி அரசிற்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றிணைந்து நடத்துவார்கள்.” என்று ஜோகிந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

” ஷாஹீன் பாக் போராட்டத்தை கலைத்தது போல விவசாயிகள் போராட்டத்தை கலைக்க நினைக்க வேண்டாம் ” – ராகேஷ் திகாயத்

மேலும், மே மாதத்தில் விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி மற்றொரு பேரணியை நடத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்