Aran Sei

விவசாய தொழிலாளர்களின் சுதந்திர போராட்ட தினம் : சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடி பேரணி நடத்த போராடும் விவசாயிகள் திட்டம்

ன்றிய அரசு அமல்படுத்திய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வரும் சுதந்திர தினத்தைகிசான் மஸ்தூர் ஆசாதி சங்கம் திவாஸ்‘ (விவசாய தொழிலாளர்களின் சுதந்திர போராட்ட தினம்) என்று அனுசரிப்பார்கள் என்றும் நாடு முழுவதும் மூவர்ண கொடிகளை ஏந்தி பேரணிகளை மேற்கொள்வார்கள் என்றும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மூவர்ணக்கொடி ஏந்திய பேரணியை மாவட்ட தலைநகரை நோக்கியோ, வட்டார தலைநகரை நோக்கியோ அல்லது அருகில் உள்ள விவசாயிகளின் போராட்டக்களத்தை நோக்கியோ முன்னெடுத்து செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள் போன்றவற்றில் தேசியக் கொடிகள் கட்டப்பட்டு இந்த பேரணியில் அணி வகுக்கப்படும். ஆகஸ்ட் 15 நடக்கும் அரசின் அதிகாரப்பூர்வ கொடி ஏற்ற நிகழ்ச்சிகள் மற்றும் தேசியக் கொடி அணிவகுப்பு ஆகியவற்றை விவசாயிகள் எதிர்க்க மாட்டார்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஆனாலும், பாஜக தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் எங்கள் முடிவில் எந்த மாற்றம் இல்லை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு போட்டியாக விவசாயிகள் நடத்திவரும் விவசாயிகள் நாடாளுமன்றம் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 4), 10-வது நாளை நிறைவு செய்தது. அப்போது, விவசாயிகள் நாடாளுமன்றத்தில் மூன்று  விவசாய  விரோத சட்டங்களுக்கு எதிராகவும், காற்று மாசுபாடு மற்றும் மின்சாரத் திருத்த மசோதாவுக்கு எதிராகவும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்.” என்று தனது அறிக்கையில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா கூறியுள்ளது.

மேலும், விவசாய விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கும் மசோதாவையும் விவசாயிகள் தங்களின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்