மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஹரியானாவின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டம் நடைபெற்று வரும் இடங்களில் ஒன்றான திக்ரி எல்லையிலிருந்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவில், அந்த விவசாயியின் தற்கொலை நடைபெற்று இருக்கிறது, எனக் காவல்துறை, தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த 52 வயதான கரம்வீர் சிங்கின் உடல் ஞாயிற்கிழமை (பிப்ரவரி 7) கண்டெடுக்கப்பட்டதாகவும், தற்கொலை செய்து கொண்ட அவரது, உடல் அருகே கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும், பகதூர்கார்க் காவல்நிலைய அதிகாரி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
பணக்கார விவசாயிகள், உலகளாவிய சதிகள், உள்நாட்டு முட்டாள்தனம் – பி சாய்நாத்
”அன்புள்ள விவசாய சகோதரர்களே, மோடி அரசு தேதிக்குத் தேதி தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறது… இந்தக் கருப்புச் சட்டங்கள் எப்போது திரும்பப் பெறப்படும் என்பது யாருக்கும் தெரியவில்லை” என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
அதே திக்ரி எல்லையில், இருவாரங்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். டிசம்பர் மாதம் பஞ்சாப்பை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் விஷம் குடித்து இறந்தார்
உத்தர்காண்ட் பனிப்பாறை உடைப்பு பேரழிவு – பருவநிலை மாற்றம் காரணம்
முன்னதாகச் சீக்கிய மத போதகரான சாந்த் ராம் சிங், சிங்கு எல்லைப்பகுதியில், ”விவசாயிகள் வலியைத் தாங்க முடியவில்லை” எனக் கூறி தற்கொலை செய்துகொண்டார் என தி வயர் செய்தி தெரிவிக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி டெல்லியின் எல்லைப் பகுதிகளில், நவம்பர் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், குறைந்த பட்ச ஆதரவு விலை நடைமுறையை ஒழித்துக் கட்ட இந்த மூன்று சட்டங்கள் வழி வகுக்கும் என்பதோடு, விவசாயிகளை பெரு நிறுவனங்களின் ‘தயவில்’ விட்டு விடும் என்று அஞ்சுவதாகவும் தி வயர் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.