குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறை மற்றும் ஜனவரி 29 ஆம் தேதி மோதல்களுக்குப் பிறகு, குறைந்தது 30 பேருக்கு மேல் காணவில்லை விவசாயிகள் போராட்டக் குழுவின் (சம்யுக்த் கிசான் மோர்ச்சா) சட்டக் குழு தெரிவித்துள்ளது.
“கடந்த நான்கு ஐந்து நாட்களாக, எங்கள் குழு ஒவ்வொரு வாகனமாக சென்று, எங்கள் பட்டியலில் (காணாமல் போனவர்கள் பட்டியல்) உள்ளவர்களை பற்றி விசாரித்து வருகின்றோம். அதைத் தவிர, களத்தில் உள்ள எங்கள் மூத்த வழக்கறிஞர்களிடம் பட்டியலை அளித்து, காவல் நிலையங்களில் அவர்கள் உள்ளனரா? என்று விசாரித்து வருகிறோம்.” என்று சட்டக் குழுவின் உறுப்பினரும் வழக்கறிஞருமான ரமன்தீப் பத்தால் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
திக்ரி எல்லையில் விவசாயி தற்கொலை – விவசாயச் சட்டங்களை அரசு திரும்ப பெறாதததால் விரக்தி
“எங்களின் தகவல் தொழில்நுட்ப அணியினர், காணாமல் போனவர்களின் அலைபேசி எண்ணை வைத்து, அவர்களை கண்டறிய முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது குறித்து நாங்கள் அஞ்சுகிறோம்.” என்று ரமன்தீப் பத்தால் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் ஒரு சிக்கல் என்னவென்றால், காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ள சிலருக்கு தொடர்பு எண்கள் போன்ற விவரங்கள் இல்லாமல் இருப்பது என்று குறிப்பிட்டுள்ள மற்றொரு உறுப்பினரான ராமன், “நாங்கள் போராட்ட மேடையில் அவர்களை பற்றிய அறிவிப்புகளை கொடுத்து வருகிறோம். காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும், தெரிந்த நபர்களின் எண்ணிக்கையைப் பற்றியும், மக்கள் தானாக முன்வந்து எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தேடுவதற்கான பணியில் ஈடுபட முடியும்.” என்று அவர் கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.