Aran Sei

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரும் விவசாயிகள்: 100 இடங்களில் 180 நாட்களை கடந்து தொடரும் போராட்டம்

டந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி, பஞ்சாபில் உள்ள பர்னாலா ரயில் நிலையத்தில், விவசாய சட்டங்களை நீக்க கோரி விவசாயிகள் தொடங்கிய காலவரையற்ற போராட்டமானது, மார்ச் 29 அன்று 180 வது நாளை எட்டியுள்ளது.

பர்னாலாவில் வசித்து வரும் குல்வந்த் சிங் இப்போராட்டம் குறித்து பேசியபோது, “இந்தப் போராட்டத்தை நான் தொடக்கத்திலிருந்தே ஆதரித்து வருகிறேன். மார்ச் 26 அன்று, பர்னாலா ரயில் நிலையத்தில் நடந்து வரும் இப்போராட்டம் 177 நாளை தொட்டது. போராடும் இடத்தை இந்த இரயில் நிலைய வளாகத்திற்குள் மாறிக்கொண்டே இருப்போமே அன்றி, இரயில் நிலையத்தை விட்டு வெளியேறமாட்டோம். மார்ச் 29 ஆம் தேதி ஹோலி பண்டிகையின்போது, நாங்கள் 180 நாட்களை நிறைவு செய்தோம். ஆனால், மத்திய அரசு இதற்கு இன்னும் செவி சாய்க்கவில்லை.” என்று தன் வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார்.

‘மீண்டும் டிராக்டர்களுடன் டெல்லிக்குள் நுழைவோம்; நாடாளுமன்றத்தில் மண்டி திறப்போம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

இந்திய உணவு கழகத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும், திக்ரிவாலா கிராமத்தைச் சேர்ந்த விவசாயியுமான 70 வயது ஜக்தார் சிங், மூன்று சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் இப்போராட்டத்தை நிறுத்தமாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 1 ஆம் தேதியன்று, பர்னாலா ரயில் நிலையத்தில் உள்ள இரயில் தடங்களை விவசாயிகள் கைபற்றினர். அக்டோபர் 22 ஆம் தேதி, சரக்கு இரயிகளுக்கு அனுமதியளித்து, போராட்டத்தை இரயில்வே பிளாட்பாரத்திற்கு மாற்றியுள்ளனர். நவம்பர் 5 ஆம் தேதியிலிருந்து, போராட்டத்தை இரயில் நிலையத்தின் வாகன நிறுத்தத்திற்கு மாற்றி, இப்போது வரை தொடர்கின்றனர்.

பர்னாலா ரயில் நிலையம் உட்பட பஞ்சாப்பின் நூறு இடங்களில், மார்ச் 30 ஆம் தேதி ஹோலியன்று  விவசாயிகளின் போராட்டம்  180 நாட்களை எட்டியுள்ளது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்