Aran Sei

‘கடலில் திசைமாறியதால் சிறையில் கைதியானோம்’ : திருச்சி சிறையிலுள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாம் என்ற தனிச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழராகிய 78 பேர் தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று (ஜூன் 19), 11வது நாளை எட்டியுள்ள கவனயீர்ப்பு போராட்டம்  இதுவரை  எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில், கடும் வெயிலுக்கு மத்தியில்  தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.

‘தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்’ – பிரதமருக்கு வைகோ கடிதம்

பெரும்பாலும் இலங்கையின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர்களான இவர்கள், மீன் பிடிக்கையில் வழிதவறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததால், இந்திய கடலோர காவல்படையால் சிறைப்படிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். மாதக்கணக்காக சிறையில் உள்ளதாகவும், எங்களை விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உதவ வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

‘திசைமாறி வந்த எமக்கு வலையில் மீன் அகப்படவில்லை. மாறாக, சிறையில் மீனவர்களாகி நாங்கள் அடைப்பட்டோம்.’, ‘அகதிகளாய் பிறந்து, வளர்ந்து, படித்து, அயல் நாடே தெரியாத எங்களுக்கு அயல்நாட்டவர் சட்டம் எதற்கு?’ என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியுள்ளனர்.

இன்று (ஜூன் 19), ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்