Aran Sei

கொரோனாவால் கோயம்பேட்டில் சில்லறை வியாபார கடைகளுக்கு தடை: வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை (ஏப்ரல் 10) முதல் கோயம்பேட்டில் சில்லறை வியாபாரிகள் கடைகளைத் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயம்பேடு சிறு வியாபாரிகள், கோயம்பேடு காய்கறி சந்தைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நேற்று (ஏப்ரல் 8), தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் இயங்க தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. இத்துடன் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விதிக்கப்பட்டன.

மீண்டும் ஊரடங்கிற்கு தயாராகிறதா தமிழகம் – ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 9), இந்தக் கட்டுப்பாட்டு அறிவிப்பால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் இருக்க கடைகளைத் தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து கோயம்பேடு சிறு வியாபாரிகள் கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுடன் காவல்துறையினரும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் எந்தப் பயனும் இல்லை. கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு அனுமதி அளிக்கும் வரையில்,எங்கள் போராட்டம் தொடரும் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்