Aran Sei

டெல்லியின் கடுங்குளிரில் சிக்கியுள்ள விவசாயிகள் : கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசு

credits : the indian express

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி விவசாயிகள் கடந்த 35 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயப் போராட்டங்களை கைவிடக் கோரியும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறியவும் பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரசு விவசாயச் சங்கங்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுங்குளிர் (1.1 டிகிரி செல்சியஸ்) டெல்லியில் நிலவியுள்ளது. அந்தக் கடுங்குளிரிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத் தளங்களிலேயே இருந்து வருகின்றனர்.

ஒன்றிணையும் இந்திய விவசாயிகள் : விவசாய சட்டத்திற்கெதிராகத் தீவிரமடையும் போராட்டம்

நேற்று, மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் 41 விவசாய சங்க பிரதிநிதிகள் இடையே 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தையில் 50 சதவீத உடன்பாடு ஏறபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

32வது நாளை தொட்ட விவசாயிகள் போராட்டம் – 100வது விவசாயி ரயிலை துவக்கி வைத்த மோடி

மின் கட்டண உயர்வு மற்றும் விவசாய பொருட்களின் மீதியை எரிப்பது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் மூன்று விவசாயச் சட்டங்களை திரும்ப பெற கோருவது மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட ரீதியான உத்தரவாதம் வழங்குவது தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக தி இந்து தெரிவித்துள்ளது.

டெல்லி – மீரட் நெடுஞ்சாலையை கைப்பற்றிய விவசாயிகள் – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்திற்கு பாதுகாப்பாக நூற்றுக்கணக்கான காவலர்கள் சிங்கு, காசிப்பூர், திக்ரி எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் தொடர் போராட்டம் : முடங்கியது டெல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து

உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்க டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் “8 லட்சம் மக்கள் வீதிகளில் அழுது கொண்டிருக்கும்போது எங்களால் எவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட முடியும்” என்று கேள்வியெழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்