Aran Sei

தலித்கள் மீதான பிரம்படி தாக்குதலை எதிர்த்த பேரணி : ஜிக்னேஷ் மேவானி உட்பட 10 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது

குஜராத் மாநிலம் மெஹ்சானா நகரில் நடைபெற்ற பேரணி தொடர்பாக, அம்மாநில சட்டப்பேரவையின் சுயேச்சை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில தலைவர் ரேஷ்மா படேல் உட்பட 10 பேர் மீது குற்றச்சாட்டுகளை மெஹ்சானா நீதிமன்றம் தொகுத்துள்ளது.

இப்பேரணியில் பங்கேற்ற கன்னையா குமாரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர் மீது தனி வழக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தலித் செயல்பாட்டாளர் படுகொலை: குற்றவாளிகளை காப்பாற்றும் குஜராத் அரசு – ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

குஜராத் மாநில உனா நகரில், பொது இடத்தில் வைத்து தலித்களுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அச்சம்பவத்தின் ஓராண்டை நினைவு கூறும் விதமாக, 2017-ம் ஆண்டு ஜூலை மாதம், ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார், ரேஷ்மா படேல் உட்பட பலர் இணைந்து, மெஹ்சானா நகரிலிருந்து தனேரா நகர் வரை விடுதலை அணிவகுப்பு (ஆசாத் கூச்) என்ற பெயரில் பேரணி நடத்தினர்.

இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் குர்ஜார்,  “ஜிக்னேஷ் மேவானி உட்பட குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கு எதிராக இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 143 (சட்டசபைக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை) -ன் கீழ் மெஹ்சானா நீதிமன்றம் குற்றச் சாட்டுகளை தொகுத்துள்ளது. கன்னையா குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆகவே, குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜராகும்போது அவர் மீது தனியாக வழக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்