Aran Sei

மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை உயர்வு – ஒரு லிட்டரை ஒரு ரூபாய்க்கு விற்று எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் அம்பேத்கர் மாணவர்கள் அமைப்பு

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையிலும், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் நகரில் 500 நபர்களுக்கு பெட்ரோலை லிட்டருக்கு 1 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது டாக்டர் அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர் சிறுத்தைகள் அமைப்பு.

ஒருவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெட்ரோல் பங்கில் மக்கள் கூட்டம் அதிகமானதால், கூட்டத்தை கட்டுப்படுத்த காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டம் – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை

இது குறித்து, டாக்டர் அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர் சிறுத்தைகள் அமைப்பின் மாநில தலைவர் மகேஷ் சர்வகோடா பேசுகையில், “பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. நரேந்திர மோடி ஆட்சியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. ஆகவே மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடவும், ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் வழங்க முடிவு செய்தோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “எங்களைப் போன்ற ஒரு சிறிய அமைப்பால் 500 பேருக்கு நிவாரணம் வழங்க முடியுமென்றால், அரசாலும் நிவாரணம் வழங்க முடியும்” என்று கூறியுள்ளார்.

Source: PTI

அசிங்கப்பட்ட H Raja | நடந்தது என்ன?

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்