Aran Sei

‘வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவவாதிகள்’ – கர்நாடக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தும் மாற்றத்திற்கான சட்ட கூட்டமைப்பு

ன்முறையில் ஈடுபடும் இந்துத்துவவாதிகள்மீது பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உரிய நடவடிக்கை எடுக்க கோரி, இன்று(அக்டோபர் 21) அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

முக்கியமாக, இன்று(அக்டோபர் 21) காலை 11 மணிக்கு, பெங்களூருவில் உள்ள மைசூர் வங்கி அருகில் போராட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக, நேற்று(அக்டோபர் 20), போராட்டக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதம் மற்றும் சாதியின் பெயரால் அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கும் வன்முறையில் ஈடுபடும் தீவிரவாத குழுக்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, இத்தகைய வன்முறைகளை உடனடியாக கர்நாடக மாநில அரசு நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, இந்த வன்முறைகளை நியாயப்படுத்தும் வகையில் முதலமைச்சர் பேசியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது கூற்று வெவ்வேறு சாதி அல்லது மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் நண்பர்களாக இருப்பது அல்லது காதலிப்பது தவறு என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் உள்ளது என்று போராட்டக் குழுக்களின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் – மூவரைக் கைது செய்த கர்நாடக காவல்துறை

இதுகுறித்து பேசியுள்ள மாற்றத்திற்கான சட்ட கூட்டமைப்பின் வழக்கறிஞர் வினய் ஸ்ரீனிவாசா, “மாரல் பாலிஸிங் சம்பவங்கள் அடிப்படையில் அடையாள ரீதியாக பிரிவினைக்கு வழிவகுக்கிறது. முதலமைச்சர் அரசியலமைப்பு ஒழுக்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமே அன்றி, அறநெறி பற்றிய ஒருவரின் கருத்துக்கு அல்ல. பதிவியேற்பின்போது தான் செய்த உறுதிமொழியை நிலைநாட்ட முடியாவிட்டால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். கர்நாடகாவை வெறுப்பும் வன்முறையும் நிறைந்த மாநிலமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவவாதிகள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்