Aran Sei

சிஏஏ-வுக்கு எதிராக அஸ்ஸாமில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் – மாணவர்கள் மீது காவல்துறை தடியடி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அஸ்ஸாம் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்ததாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி மற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த வார இறுதியில் அஸ்ஸாம் செல்லவுள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை இரவு போராட்டம் நடத்தியுள்ளனர்

அஸ்ஸாம் தலைநகர் தேஸ்பூரில், தீப்பந்தங்களுடன் பேரணி சென்ற மாணவர் அமைப்பினரை, காவல்துறையினர் தடுத்ததாகவும், அதைத்தொடர்ந்த காவல்துறையினருக்கும், மாணவர் சங்கத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் என்டிடிவி கூறியுள்ளது.

அசாம் என்.ஆர்.சி தடுப்பு முகாம்களில் ரேஷன் பொருட்கள் நிறுத்தம்

இதைத்தொர்டர்ந்த மாணவர் அமைப்பினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினரை கைது செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதி வழியில் நடைபெற்ற பேரணியை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதுடன், மாணவர் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, சனிக்கிழமையன்று சோனிட்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்டிடிவியிடம் பேசியுள்ள, அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் டிபங்கா நாத் “எங்களுடைய அமைதியான, ஜனநாயகவழியிலான, தீப்பந்த பேரணியை தடுத்து நிறுத்த காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அடக்குமுறையின் மூலம் பாஜக அரசு எங்களின் ஜனநாயக உரிமையை பறிக்க முயல்கிறது” என்று கூறியுள்ளார்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் அகில் கோகோய் பிணை மனு – ரத்து செய்த கௌஹாத்தி உயர் நீதிமன்றம்

“பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், விரைவில் இங்கு வரவுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தீவிரப்படுத்தவுள்ளோம். இந்த சட்டம் திரும்பப் பெறப்படும்வரை எங்களுக்கு ஓய்வில்லை” என்றும் டிபங்கா நாத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் அஸ்ஸாம் வருவதை முன்னிட்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து அஸ்ஸாம் மணாவர்கள் சங்கத்தின் சார்பாக, மூன்று நாட்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், 2015 ஆண்டுக்கு முன் இந்தியாவில் குடியேறிய, இஸ்லாமியர் அல்லாத வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்துள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்