Aran Sei

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் – விரட்டியடித்த விசிக தொண்டர்கள்

ம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தல்லாகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் விரட்டி அடித்துள்ளனர்.

இன்று (ஏப்ரல் 14) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தையான டாக்டர் அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் செக்போஸ்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அங்கு வருவதாக இருந்தது. அதற்கு முன்னால், பாஜகவினர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றுள்ளனர். அதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இட ஒதுக்கீட்டை விழிப்புணர்வோடு கவனிக்க வேண்டும் – ஆனந்த் டெல்டும்டே

இதைத்தொடர்ந்து , இரண்டு கட்சியினருக்கும் இடையில் மோதல் உண்டாகும் சூழல் உருவாகியுள்ளது. ஒரு கட்டத்துக்குப் பின்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள்  பாஜகவினரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

பின்பு, பாஜகவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்